Thursday 3 September, 2009

குருவே சரணம்

குரு என்பவர்கள் நமக்கு கற்றுத் தருபவர்கள். அம்மா அப்பாவுக்கு அடுத்து குருதான். அதற்குப் பிறகுதான் தெய்வம். மாதவும் பிதாவும், குருவும்தான் நமக்குத் தெய்வம் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம். குரு என்பவர்தான் நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்கள். நாம் கல்வி கற்கும் பருவங்களில் எத்தனையோ ஆசிரியர்களைச் சந்தித்தாலும் ஒரு சிலர்தான் நம்மால் மறக்க முடியாதவர்களாகி விடுகின்றனர்.

அந்த வகையில் எனக்கு அமைந்த தமிழாசிரியரையும் உடற்கல்வி ஆசிரியரையும் நான் இன்றளவும் மதிக்கிறேன்.

தமிழாசிரியர் திரு.பர்னபாஸ்.

தமிழ் நம் தாய் மொழிதான் என்றாலும் அதையும் சுவைபட நடத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான். இலக்கணத்தையும் கவனிக்க வைத்தவர் அவர். திருக்குறளாகட்டும், சிலப்பதிகாரமாகட்டும் எதையும் தன் இனிய குரலால் பாடியவாறு பாடம் எடுப்பார். மாணவர்களிடம் மிகவும் அன்பாக பழகுவார். பாடம் சம்பந்தப்பட்டவற்றை மட்டுமல்லாமல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கற்றுக் கொடுத்தவர் அவர்.

இயல்பாக மாணவர்களிடம் பழகும் அதே நேரத்தில் கண்டிப்பாகவும் நடந்து கொள்வார். தன் கைப்பையில் அடக்கமாக அரையடி நீளமுள்ள சிறிய பிரம்பு வைத்திருப்பார். தவறு செய்யும் மாணவர்களுக்கு கையின் மணிக்கட்டு எலும்பில்தான் அடிவிழும். எங்களுக்கு ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து அவரே தமிழ் ஆசிரியராக இருந்ததால் அவரை பற்றி நாங்களும் எங்களைப் பற்றி அவரும் தெரிந்து வைத்திருந்ததால் பெரும்பாலும் பிரம்புக்கு வேலையில்லாமல் போனது.

இன்று தமிழ் எழுத்துகளை (கூடியவரையில்) பிழையின்றி நான் எழுதுகிறேன் என்றால் அதற்கு முழுப் பொறுப்பும் அவரே.

அடுத்து உடற்கல்வி ஆசிரியர். திரு. தன்ராஜ்.

இந்த "உடல் + கல்வி' என்பதற்கு அர்த்தமே அவரிடம்தான் கற்றுக்கொண்டோம். அந்த அளவுக்கு உடல் நலம் பேணுதல் பற்றி எங்களுக்கு கற்றுக் கொடுத்தவர். தலைமுடி அதிகமாக இருந்தாலோ, விரல்களில் நகம் அதிகமாக இருந்தாலோ, பள்ளி சீருடை அழுக்காக இருந்தாலோ , சீருடையில் பட்டன் இல்லாமல் இருந்தாலோ தொலைந்தோம். சட்டை அழுக்காக இருந்தால் தன் பையிலிருந்து காசு கொடுத்து எங்கள் பள்ளிக்கு எதிரில் இருக்கும் குளத்தில் துவைத்து, காயவைத்து அவரிடம் காண்பித்துவிட்டுத்தான் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தவர்.

இதற்காகவே அவர் வகுப்பு என்றால் எல்லாரும் தங்களை ஒருமுறை சரிபார்த்துக் கொள்வார்கள். உடற்பயிற்சி மட்டும் சொல்லித் தராமல் இந்த அளவுக்கு எங்கள் நலனில் அக்கறை கொண்ட அவரை அந்த நேரத்தில் வெறுப்பாக பார்த்தாலும் இப்போது அவரை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.

எனது பள்ளிக் காலத்திலேயே திரு தன்ராஜ் அவர்கள் ஓய்வு பெற்றார். அப்போது நடைபெற்ற விழாவில் அவர் கண்கலங்கி “நான் பணிக்காலத்தில் உங்களிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்” என்றபோது அத்தனை மாணவர்களும் கலங்கித்தான் போனார்கள்.

எங்கள் வாழ்க்கையின் உயர்வுக்கு வித்திட்ட திரு.பர்னபாஸ் அவர்களையும் திரு.தன்ராஜ் அவர்களையும் இந்த தினத்தில் (செப்டம்பர்-5 ஆசிரியர் தினம்) நினைவு கூர்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் பூரண ஆயுளுடன் நிறைவான வாழ்க்கை வாழவேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

32 comments:

பழமைபேசி said...

தங்களுடன் நானும் பங்கு கொள்கிறேன்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்த நினைவு கூறல் இடுகையின் மூலம் உங்கள் உயர்வான குணம் தெரிகிறது !!!

எங்களின் ஆசிரியரையும் நினைக்க வைத்துவிட்டீர்கள் நன்றி

ஹேமா said...

மணி,உங்களைத் தலை வணங்குகிறேன்.வாழ்வை உயர்த்தியவர்களை மறக்காமல் இருக்கும்வரை எங்கள் வாழ்வில் என்றுமே இறக்கம் இல்லை.

Robin said...

தமிழ் பாட வகுப்புகள் என்று மறக்க முடியாத ஓன்று. தமிழாசிரியர்கள் செந்தமிழில் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்றிருக்கும். இந்த உடற்பயிற்சி ஆசிரியர்கள் மட்டும் ஏன் உடற்பயிற்சி சொல்லிகொடுப்பதில்லை என்பதுதான் புரியாத புதிர்.

ஈரோடு கதிர் said...

இந்த இடுகையை பெரிதும் மதிக்கிறேன்

வாழ்த்துகள்

குடந்தை அன்புமணி said...

//பழமைபேசி said...
தங்களுடன் நானும் பங்கு கொள்கிறேன்!//

வாங்க வாங்க...

குடந்தை அன்புமணி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
இந்த நினைவு கூறல் இடுகையின் மூலம் உங்கள் உயர்வான குணம் தெரிகிறது !!!

எங்களின் ஆசிரியரையும் நினைக்க வைத்துவிட்டீர்கள் நன்றி//

என் இடுகைக்கு அர்த்தம் கிடைத்துவிட்டது.

குடந்தை அன்புமணி said...

//ஹேமா said...
மணி,உங்களைத் தலை வணங்குகிறேன்.வாழ்வை உயர்த்தியவர்களை மறக்காமல் இருக்கும்வரை எங்கள் வாழ்வில் என்றுமே இறக்கம் இல்லை.//

உண்மைதான் தோழி.

குடந்தை அன்புமணி said...

//Robin said...
தமிழ் பாட வகுப்புகள் என்று மறக்க முடியாத ஓன்று. தமிழாசிரியர்கள் செந்தமிழில் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்றிருக்கும். இந்த உடற்பயிற்சி ஆசிரியர்கள் மட்டும் ஏன் உடற்பயிற்சி சொல்லிகொடுப்பதில்லை என்பதுதான் புரியாத புதிர்.//

அப்படியா... எனக்கு வாய்த்த உடற்பயிற்சி ஆசிரியர்கள் கொடுத்த காசுக்கு மேலே வேலை பார்த்தவர்கள்.

குடந்தை அன்புமணி said...

//கதிர் - ஈரோடு said...
இந்த இடுகையை பெரிதும் மதிக்கிறேன்

வாழ்த்துகள்//

மிக்க நன்றிங்க.

Robin said...

//அப்படியா... எனக்கு வாய்த்த உடற்பயிற்சி ஆசிரியர்கள் கொடுத்த காசுக்கு மேலே வேலை பார்த்தவர்கள்.// நீங்கள் கொடுத்து வைத்தவர். எனக்கு உடற்பயிற்சி ஆசிரியர்கள் என்றாலே நினைவுக்கு வருவது அவர்கள் வாயிலிருக்கும் விசிலும் கையிலிருக்கும் பிரம்பும்தான்.

Vidhoosh said...

:) நல்ல நினைவுகள்.

--வித்யா

குடந்தை அன்புமணி said...

///Vidhoosh/விதூஷ் said...
:) நல்ல நினைவுகள்.

--வித்யா//

வாங்க தோழி.

க.பாலாசி said...

//எனது பள்ளிக் காலத்திலேயே திரு தன்ராஜ் அவர்கள் ஓய்வு பெற்றார். அப்போது நடைபெற்ற விழாவில் அவர் கண்கலங்கி “நான் பணிக்காலத்தில் உங்களிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்” என்றபோது அத்தனை மாணவர்களும் கலங்கித்தான் போனார்கள்.//

இதுபோன்ற தருணங்களில் நானும் நின்றிருக்கிறேன்...அந்த நேரத்தில் நமது மனதில் உண்டாகும் ஒரு வித வலியை சொல்ல வார்த்தைகளே இல்லை எனலாம்...

நானும் உங்களது ஆசிரியர்கள் நீடுழி வாழ பிராத்திக்கிறேன்...

குடந்தை அன்புமணி said...

//Robin said...
//அப்படியா... எனக்கு வாய்த்த உடற்பயிற்சி ஆசிரியர்கள் கொடுத்த காசுக்கு மேலே வேலை பார்த்தவர்கள்.// நீங்கள் கொடுத்து வைத்தவர். எனக்கு உடற்பயிற்சி ஆசிரியர்கள் என்றாலே நினைவுக்கு வருவது அவர்கள் வாயிலிருக்கும் விசிலும் கையிலிருக்கும் பிரம்பும்தான்.//

ரொம்ப அனுபவப்பட்டிருப்பீர்கள் போல...

குடந்தை அன்புமணி said...

//க.பாலாஜி said...
//எனது பள்ளிக் காலத்திலேயே திரு தன்ராஜ் அவர்கள் ஓய்வு பெற்றார். அப்போது நடைபெற்ற விழாவில் அவர் கண்கலங்கி “நான் பணிக்காலத்தில் உங்களிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்” என்றபோது அத்தனை மாணவர்களும் கலங்கித்தான் போனார்கள்.//

இதுபோன்ற தருணங்களில் நானும் நின்றிருக்கிறேன்...அந்த நேரத்தில் நமது மனதில் உண்டாகும் ஒரு வித வலியை சொல்ல வார்த்தைகளே இல்லை எனலாம்...

நானும் உங்களது ஆசிரியர்கள் நீடுழி வாழ பிராத்திக்கிறேன்...//

உண்மைதான் பாலாஜி. மிக்க நன்றி...

இராகவன் நைஜிரியா said...

ஆஹா.. தம்பி குடந்தை அன்பு மணி... அருமைய்யா அருமை. தமிழ் ஆசானைப் பற்றி நினைப்பவர்கள் மிகக் குறைவு. தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

சரியான நேரத்தில் மலர்ந்த மலரும் நினைவு... அழகாக...சுகந்தமாக மனம் வீசுகிறது....

குடந்தை அன்புமணி said...

//இராகவன் நைஜிரியா said...
ஆஹா.. தம்பி குடந்தை அன்பு மணி... அருமைய்யா அருமை. தமிழ் ஆசானைப் பற்றி நினைப்பவர்கள் மிகக் குறைவு. தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.//

வாங்கண்ணா...மிக்க நன்றிண்ணா...

குடந்தை அன்புமணி said...

//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
சரியான நேரத்தில் மலர்ந்த மலரும் நினைவு... அழகாக...சுகந்தமாக மனம் வீசுகிறது...//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சரவணா...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

thiyaa said...

தரமான படைப்பு இன்னும் நிறைய எழுத வாழ்த்துகிறேன்

தமிழ் அமுதன் said...

அருமை ..........!! என் ஆசிரியர்களை நினைவுக்கு வர வைத்ததற்கு நன்றி

குடந்தை அன்புமணி said...

//தியாவின் பேனா said...
தரமான படைப்பு இன்னும் நிறைய எழுத வாழ்த்துகிறேன்//

நன்றி தியா...

குடந்தை அன்புமணி said...

//ஜீவன் said...
அருமை ...!! என் ஆசிரியர்களை நினைவுக்கு வர வைத்ததற்கு நன்றி//

தங்கள் வருகைக்கு எனது நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

///இன்று தமிழ் எழுத்துகளை (கூடியவரையில்) பிழையின்றி நான் எழுதுகிறேன் என்றால் அதற்கு முழுப் பொறுப்பும் அவரே. ///

பாராட்டுகள் ,,, மகிழ்ச்சியும்

ஆ.ஞானசேகரன் said...

//எங்கள் வாழ்க்கையின் உயர்வுக்கு வித்திட்ட திரு.பர்னபாஸ் அவர்களையும் திரு.தன்ராஜ் அவர்களையும் இந்த தினத்தில் (செப்டம்பர்-5 ஆசிரியர் தினம்) நினைவு கூர்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் பூரண ஆயுளுடன் நிறைவான வாழ்க்கை வாழவேண்டுமென பிரார்த்திக்கிறேன். //

நானும் வாழ்த்துகளுடன் பிரார்த்திக்கிறேன் நண்பா

தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

குடந்தை அன்புமணி said...

//பாராட்டுகள் , மகிழ்ச்சியும்.//

//நானும் வாழ்த்துகளுடன் பிரார்த்திக்கிறேன் நண்பா//

மிக்க மகிழ்ச்சி நண்பா.

குடந்தை அன்புமணி said...

//தமிழ் முல்லை said...
தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!//

ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டேன் தோழி. என்னைப் பற்றியோ என்று... இதோ வருகிறேன்...

நாஞ்சில் நாதம் said...

:))

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm

அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm

என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!

முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புணித செயலில் ஈடுபடுத்துங்கள்

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...