Sunday, 6 September 2009

பயணத்தில் ஓர் நாள்...

யிலில் நல்ல கூட்டம். அடித்துப் பிடித்து எப்படியோ ஏறி இடம் கிடைத்த நிம்மதியில் பெருமூச்சு விட்டவாறு அமர்ந்தார் ராஜாராமன். முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தவாறு நிமிர்ந்தவர் ஆச்சரியப்பட்டார்.

“அடடே... சதா எப்படி இருக்கே வா... வா... உட்காரு” என்றவாறு சற்று நகர்ந்து இடம் கொடுத்தார்.

“நல்லா இருக்கேன்டா...” என்று புன்னகைத்தவாறு அமர்ந்தார் சதா என்கிற சதாசிவம். ராஜாராமனின் பால்ய கால நண்பர்.

“எவ்வளவு நாளாச்சு உன்னைப் பார்த்து. ஆமா வீட்டில எல்லாம் எப்படி இருக்காங்க...” என்று ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.பேச்சு குழந்தைகள் பற்றி திரும்பியது.

“உனக்கு பெண் குழந்தைதானே... கல்யாணம் ஆகிடுச்சா?”

“அதை ஏன்டா கேட்கிற நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். இன்னும் அமையல... நீ ஏதாவது நல்ல இடமாயிருந்தா சொல்லேன். இருபது பவுன் போடலாம். கல்யாண செலவை பாதி செய்யுறேன். நகையெல்லாம் ரெடி பண்ணி வைச்சிட்டேன். எல்லாம் தாயாராத்தான் இருக்கு. மாப்பிள்ளை மட்டும் அமைஞ்சிட்டா அடுத்த முகூர்த்தத்திலேயே முடிச்சிடலாம்.”

“அவ்வளவுதானே... கவலையை விடு. உன் பொண்ணு கல்யாணம் முடிஞ்ச மாதிரிதான். நீ எதிர்பார்த்த மாதிரியே ஒரு நல்ல இடம் இருக்கு. அவங்களும் பொண்ண தேடிக்கிட்டிருக்காங்க. நீ சரின்னு சொன்னா, வர்ற ஞாயிற்றுக் கிழமையே அழைச்சிட்டு வர்றேன். போதுமா?”

“ரொம்ப சந்தோஷம்டா சதா... வர்ற ஞாயிற்றுக்கிழமை வேண்டாம். சனிக்கிழமை நாங்க குடும்பத்தோட திருப்பதி போறோம். திங்கட்கிழமைதான் வருவோம். அதனால அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரச்சொல்லு. உன் மூலமா இந்த வரன் அமைச்சா அதைவிட பெரிய சந்தோசம் வேற இல்ல...”

“சரி உன் அட்ரஸ், போன் நம்பர் சொல்லு. முன்னாடியே தகவல் கொடுத்துட்டு அழைச்சிட்டு வர்றேன்” என்றார்.ராஜாராமன் சொல்ல, சதாசிவம் குறித்துக்கொண்டார்.

“சரி நான் வர்றேன் ராஜா. இங்க பல்லாவரத்தில ஒரு நண்பரை பார்க்க வேண்டியிருக்கு”என்று இறங்கிக் கொண்டார்.


திங்கட்கிழமை திருப்பதி போய்விட்டு திரும்பி வந்த ராஜாராமன் அதிர்ந்து போனார். வீட்டின் பூட்டு உடைக்கப்ப்ட்டு கிடந்தது. பரபரப்புடன் உள்ளே ஓடினார். பீரோ திறந்து கிடந்தது. நகைகள் அனைத்தும் களவாடப்பட்டிருந்தது. அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்துவிட்டார் ராஜா ராமன்.

22 comments:

ஈரோடு கதிர் said...

நல்லாத்தானே விளம்பரம் பண்ணியிருக்காரு

Vidhoosh said...

பயணிக்கும் போது உரத்து சொந்தக் கதை பேசிவருபவர்கள் பற்றி இப்படி இருக்கிறார்களே, என்று நினைத்ததுண்டு.

அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

--வித்யா

க.பாலாசி said...

நல்ல சிந்தனை அன்பரே...சில விஷயங்களை இடம் பொருள் ஏவல் அறிந்து பேசவேண்டும். அப்படி செய்யவில்லையெனில் தாங்கள் கூறிய முடிவுதான் எல்லோருக்கும்.

சொல்லவந்ததை நறுக்கென்று சொல்லிவிட்டீர்கள்....நன்று...

மணிஜி said...

அநேகமா நோட் பண்ணது ஒரு போலிஸ்காரனா இருக்கும்

thiyaa said...

இதைத்தான் சொல்லுறது வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிறதெண்டு

குடந்தை அன்புமணி said...

//கதிர் - ஈரோடு said...
நல்லாத்தானே விளம்பரம் பண்ணியிருக்காரு//

கரெக்டா பாயிண்டை பிடிச்சிட்டீங்க...

குடந்தை அன்புமணி said...

//Vidhoosh/விதூஷ் said...
பயணிக்கும் போது உரத்து சொந்தக் கதை பேசிவருபவர்கள் பற்றி இப்படி இருக்கிறார்களே, என்று நினைத்ததுண்டு.

அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

--வித்யா//

நானும் இதுபற்றி யோசித்து, இப்படி நடக்கவும் வாய்பிருக்கிறதே என்பதால்தான் இதை எழுதியிருக்கிறேன்.
மிக்க நன்றி தோழி.

குடந்தை அன்புமணி said...

//க.பாலாஜி said...
நல்ல சிந்தனை அன்பரே...சில விஷயங்களை இடம் பொருள் ஏவல் அறிந்து பேசவேண்டும். அப்படி செய்யவில்லையெனில் தாங்கள் கூறிய முடிவுதான் எல்லோருக்கும்.

சொல்லவந்ததை நறுக்கென்று சொல்லிவிட்டீர்கள்....நன்று...//

மிக்க நன்றி நண்பரே...

குடந்தை அன்புமணி said...

//தண்டோரா ...... said...
அநேகமா நோட் பண்ணது ஒரு போலிஸ்காரனா இருக்கும்//

இருக்குமோ...

குடந்தை அன்புமணி said...

//தியாவின் பேனா said...
இதைத்தான் சொல்லுறது வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கிறதெண்டு//

அதே தாங்க...

"உழவன்" "Uzhavan" said...

எச்சரிக்கையூட்டும் இடுகை. நல்ல கருத்து அன்பு

குடந்தை அன்புமணி said...

//" உழவன் " " Uzhavan " said...
எச்சரிக்கையூட்டும் இடுகை. நல்ல கருத்து அன்பு//

நன்றி நவநீத் சார்.

ஆ.ஞானசேகரன் said...

//திங்கட்கிழமை திருப்பதி போய்விட்டு திரும்பி வந்த ராஜாராமன் அதிர்ந்து போனார். வீட்டின் பூட்டு உடைக்கப்ப்ட்டு கிடந்தது. பரபரப்புடன் உள்ளே ஓடினார். பீரோ திறந்து கிடந்தது. நகைகள் அனைத்தும் களவாடப்பட்டிருந்தது. அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்துவிட்டார் ராஜா ராமன். //


ம்ம்ம் விழிப்புணர்வு கதை

குடந்தை அன்புமணி said...

//ஆ.ஞானசேகரன் said...
//திங்கட்கிழமை திருப்பதி போய்விட்டு திரும்பி வந்த ராஜாராமன் அதிர்ந்து போனார். வீட்டின் பூட்டு உடைக்கப்ப்ட்டு கிடந்தது. பரபரப்புடன் உள்ளே ஓடினார். பீரோ திறந்து கிடந்தது. நகைகள் அனைத்தும் களவாடப்பட்டிருந்தது. அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்துவிட்டார் ராஜா ராமன். //


ம்ம்ம் விழிப்புணர்வு கதை//

அதே...!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்ல கரு. நல்ல நடை அன்புமணி.

Unknown said...

அனுபவத்தில் ஒரு ஒரு பக்க கதையா..?

கதை உங்களுக்கு, இழப்பு ஒருவருக்கு, நல்ல அனுபவம் எங்களுக்கு..

குடந்தை அன்புமணி said...

//ஜெஸ்வந்தி said...
நல்ல கரு. நல்ல நடை அன்புமணி.//

வாங்க ஜெஸ்வந்தி. மிக்க நன்றி.

குடந்தை அன்புமணி said...

//பட்டிக்காட்டான்.. said...
அனுபவத்தில் ஒரு ஒரு பக்க கதையா..?

கதை உங்களுக்கு, இழப்பு ஒருவருக்கு, நல்ல அனுபவம் எங்களுக்கு...//

நிச்சயமா...
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி நண்பா...

இரவுப்பறவை said...

நல்ல எச்சரிக்கை தான்!!

குடந்தை அன்புமணி said...

//இரவுப்பறவை said...
நல்ல எச்சரிக்கை தான்!//

அதுக்காகத்தான் இந்த கதையே...

நாஞ்சில் நாதம் said...

எச்சரிக்கையூட்டும் இடுகை. நல்ல கருத்து அன்பு அண்ணே

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நடை இயல்பாய் இருக்கிறது ! வாழ்த்துக்கள்

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...