Tuesday, 5 January, 2010

சுயபுராணம்- பகுதி 1

அவரவர்களுக்கு தனது சொந்த ஊரின் பெருமையைச் சொல்லிக் கொள்ள ஆயிரம் இருக்கும். அதிலும் சொந்த ஊரைவிட்டு (வயிற்றுப் பொழைப்புக்காக) வேலைக்காக வெளியூர்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு வளர்ந்த வாழ்ந்த ஊரைப்பற்றி பேசுவது/ எழுதுவது என்றால் தனி கொண்டாட்டம்தான். அப்படித்தான் நானும்... ஏதோ நானறிந்தவரையில் எங்கள் ஊரைப்பற்றியும், அங்கு எனக்கேற்பட்ட, நான் சந்தித்த மனிதர்கள், அவர்களுடனான எனது அனுபவங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்...

எங்கள் ஊரைப்பற்றி பெரும்பாலும் அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆமாம். எங்கள் ஊர் புகழ்வாய்ந்த ஊராயிற்றே! புலிக்கொடி பறந்த ஊர் எங்கள் ஊர். சோழ மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் ஆண்ட பூமி எங்களுடையது. நெற்களஞ்சியம் என்று பேர் பெற்ற ஊர் எங்கள் ஊர். தமிழ்ப் பல்கலைகழகங்கள், அரண்மனை, பெரிய கோயில் அமைந்த ஊர். காவிரி பாயும் நதிக்கரையில் அமைந்த ஊர் எங்கள் ஊர். தமிழகத்துக்கு பல தலைவர்களை தந்த ஊர் எங்கள் ஊர். பல தமிழறிஞர்கள் வாழ்ந்த ஊர் எங்கள் ஊர். அந்த ஊர்... தஞ்சாவூர்!ஆம்! நான் பிறந்தது தஞ்சையில்தான். தஞ்சையில் கரந்தட்டான்குடி (கரந்தை) என்ற பகுதியில்தான் நான் பிறந்தேன். எங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் வெள்ளைப் பிள்ளையார் கோயில் இன்னும் என் மனதில் நிற்கிறது. தஞ்சை அரண்மனையின் கிழக்குப் பகுதியில்தான் எங்கள் குடியிருப்பு. விவரமறியாத வயதுதான் என்றாலும் வியந்திருக்கிறேன்- தஞ்சை பெரிய கோயில், அரண்மனை, சிவகங்கை பூங்கா போன்றவற்றைப் பார்த்து... நான்காம் வகுப்புவரை தஞ்சையில்தான் படிப்பு. அதற்குப் பிறகு என் அப்பாவுக்கு வேலை மாற்றல் உத்தரவு வந்துவிட்டது. மாற்றல் வந்த இடம் தஞ்சையிலிருந்து அப்படி ஒன்றும் வெகு தூரத்தில் இல்லையென்றாலும், பிரிய மனமில்லாமல்தான் அந்த ஊரைவிட்டு பிரிந்து பயணமானோம்... எங்களின் அடுத்த வாழ்விடமாக மாறிப்போனது கோவில் நகரமாம் கும்பகோணம் என்ற குடந்தைக்கு!
(தொடரும்)

16 comments:

புதுப்பாலம் said...

தொடருங்கள்.

அன்புடன்
இஸ்மாயில் கனி

நட்புடன் ஜமால் said...

ஆஹா! அருமையாக இருக்கே

மேலும் நானும் பதிவிட ஏதோ மேட்டர் கிடைச்சிச்சி ...

நன்றியும் வாழ்த்துகளும்.

முனைவர்.இரா.குணசீலன் said...

தொடருங்கள் நண்பரே..

க.பாலாசி said...

என்ன இவ்ளோ சுருக்கமா சொல்லிட்டீங்க. பரவாயில்ல தொடர்ந்து எழுதுங்க.

//சிவகங்கை பூங்கா போன்றவற்றைப் பார்த்து...//

இன்றைக்கு பூங்கா நல்லாத்தான் இருக்கு... அங்கையும் மெரினா பீச் கணக்கா இளசுகள் நாசம் பண்ணிகிட்டிருக்காங்க.

கவிக்கிழவன் said...

தொடருங்கள்.வாழ்த்துகளும்.

இராகவன் நைஜிரியா said...

வாய்யா வா... எங்க ரொம்ப நாளா காணல..

ஆரம்பம் அருமை. அடுத்து திருக்குடந்தைப் பற்றியா..

அவலுடன்...ச்சே... ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றேன்.

♠ ராஜு ♠ said...

Welcome Back thala..

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

உங்களின் மறு பிரவேசம் மகிழ்ச்சியளிக்கிறது!! தொடர்ந்து எழுதுங்கள்!!

குடந்தை அன்புமணி said...

// நட்புடன் ஜமால் said...
ஆஹா! அருமையாக இருக்கே

மேலும் நானும் பதிவிட ஏதோ மேட்டர் கிடைச்சிச்சி ...

நன்றியும் வாழ்த்துகளும்//

சேர்த்து பணம் செலவழிஞ்சா நாட்டுப்பக்கம் ஒதுங்குதப்பான்னு ஒரு பாட்டு பெரிய இடத்துப் பெண்ணில் வரும். அதுபோல- நானும் எதைப்பற்றி எழுதுவது என்று தெரியாமத்தான் சொந்த ஊரைப்பற்றி எழுத ஆரம்பித்துள்ளேன்.

குடந்தை அன்புமணி said...

//முனைவர்.இரா.குணசீலன் said...
தொடருங்கள் நண்பரே...//
விட்டகுறை தொட்டகுறையாக இன்னும் கொஞ்சம் பணிகள்... முடிந்ததும் முழுவீச்சில் வ(லம்)லை வருவேன். தங்கள் வருகைக்கு நன்றி.

குடந்தை அன்புமணி said...

// க.பாலாசி said...
என்ன இவ்ளோ சுருக்கமா சொல்லிட்டீங்க. பரவாயில்ல தொடர்ந்து எழுதுங்க. //
தஞ்சையில் இருந்தது கொஞ்ச காலமே... அதனால்தான். சமயம் வரும்போது மீண்டும்ட வரும்...

குடந்தை அன்புமணி said...

வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி...
கவிக்கிழவன், ராஜீ...

குடந்தை அன்புமணி said...

// இராகவன் நைஜிரியா said...
வாய்யா வா... எங்க ரொம்ப நாளா காணல..

ஆரம்பம் அருமை. அடுத்து திருக்குடந்தைப் பற்றியா..

அவலுடன்...ச்சே... ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றேன்.//

பணிச்சுமையண்ணே... அதான்...
அதுசரி... அவலுடன்.. ளு- வா... லு-வாண்ணே...

குடந்தை அன்புமணி said...

//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
உங்களின் மறு பிரவேசம் மகிழ்ச்சியளிக்கிறது!! தொடர்ந்து எழுதுங்கள்!!//

நிச்சயமாக நண்பா...நீங்கள் போன் செய்தபோது உரிமையாளர் அருகிலிருந்ததால் பேச முடியவில்லை. அதற்குப் பிறகு நான் முயற்சித்தபோது உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும்.

ராமலக்ஷ்மி said...

தஞ்சை மண்ணில் பிறந்து குடந்தையில் குடி புகுந்தீர்களா? குடந்தை பற்றியும் தெரிந்திடக் காத்திருக்கிறோம். தொடருங்கள்:)!

குடந்தை அன்புமணி said...

// ராமலக்ஷ்மி said...
தஞ்சை மண்ணில் பிறந்து குடந்தையில் குடி புகுந்தீர்களா? குடந்தை பற்றியும் தெரிந்திடக் காத்திருக்கிறோம். தொடருங்கள்:)!//

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி அக்கா. விரைவில் அடுத்த பகுதியை வெளியிடுகிறேன்.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...