ஜனவரி மாதம் பிறந்தாலே கொண்டாட்டம்தான். ஆங்கில புத்தாண்டு, அதைத்தொடர்ந்து பொங்கல். இப்போது தமிழக முதல்வரின் உத்தரவால் தமிழ்புத்தாண்டும் சேர்ந்துகொண்டது.அதோடு வருடம்தோறும் சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெறும். தீவுத் திடலில் சுற்றுலாப் பொருட்காட்சியும் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் முதல் சங்கமம் நிகழ்ச்சியும் சேர்ந்து கொண்டது. இதில் எந்த வாய்பையும் தவற விடாதீர்கள். புத்தக கண்காட்சியில் அனைத்துப் பதிப்பகங்களும் 10% கழிவு தரும். ஒவ்வொரு வருடம் பல புதிய புத்தகங்களை புத்தக கண்காட்சியில் வெளியிடப்படுவது வழக்கம்.பல பதிப்பகங்கள் புத்தகக் கண்காட்சியை மையமாக வைத்தே புத்தகங்களை வெளியிட்டு லாபம் பார்க்கின்றன. அக்டோபர், நவம்பர் மாதங்களிலேயே பதிப்பக வேலைளை ஆரம்பித்து ஜனவரியில் வெளியிட்டு போட்ட முதலை எடுத்துவிடுவார்கள். பிறகு நூலகத்திற்கென அரசு வாங்கிங்கொள்ளும் புத்தகங்கள் முலம் லாபமே அவர்களுக்கு. சில பிழைக்கத் தெரியாத பதிப்பகத்தார் அல்லது ஆர்வம்மிக்க நண்பர்கள்தான் நினைத்த போது புத்தகங்களை வெளியிட்டுவிட்டு விற்பனை ஆகவில்லையே என்று புலம்பிக்கொண்டு இருப்பார்கள்.சமீபத்தில் நைஜீரியா ராகவன் அவர்களின் வலைத்தளத்திற்கு சென்று வந்தேன். அவர் புத்தக கண்காட்சிக்கு சென்று வந்தது பற்றியும், அங்கு ரூபாய் 700க்கு புத்தகங்கள் வாங்கியபிறகு கிரெடிட் கார்டு கொடுத்திருக்கிறார்.அவர்கள் கிரெடிட் கார்டுக்கு கழிவு கிடையாது என்று கூறியிருக்கிறார்கள், அதற்குப்பிறகு நிகழ்ச்சி நடத்தும் பொறுப்பாளர்களிடம் புகார் செய்தபிறகே ஏற்றுக்கொண்டார்கள்.700 ரூபாய்க்கு ரூ70 கழிவு அதற்காக நான்அவர்களிடம் வாதம் செய்தது சரியா என்று வருத்தப்பட்டிருந்தார். புத்தகத்திற்கு கழிவு 10% என்று அறிவித்துவிட்டு கிரெடிட் கார்டுக்கு கிடையாது என்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை.அவருக்கு பலரும் ஆறுதலும், நீங்கள் செய்ததுதான் சரி என்று (நான்உட்பட) கூறியிருந்தோம்.நாமாக கழிவு கேட்கவில்லை.அவர்களின் விற்பனைக்காகத்தான் கழிவு கொடுக்கிறார்கள். அதை கேட்டு பெறுவதில் தயக்கம் கூடாது. அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம்... புத்தக கண்காட்சியின் போது மட்டுமல்ல நிரந்தரமாக 10% கழிவு பெறும் வகையில் சென்னை கன்னிமாரா நூலகத்தின் பின்புறம் நிரந்தர புத்தக கண்காட்சி நடைபெறுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
6 comments:
நன்றி அன்பு மணி.
என்னுடைய வலைப்பதிவை, உங்கள் பதிவில் லின்ங் கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி.
உங்கள் பதிவுகள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்
\\நிரந்தரமாக 10% கழிவு பெறும் வகையில் சென்னை கன்னிமாரா நூலகத்தின் பின்புறம் நிரந்தர புத்தக கண்காட்சி நடைபெறுகிறது\\
நல்ல தகவல்
\\உங்கள் பதிவுகள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.\\
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும், என்னை பின்தொடர்வதற்கும் நன்றி நைஜீரியா ராகவன்.
தங்கள் வருகைக்கு நன்றி அதிரை ஜமால். அடிக்கடி வாங்க.
என்னைப்போன்றோருக்கு புத்தக காட்சிதான் திருவிழா. சென்ற ஆண்டு ஒரு சபதமெடுத்தேன். வாங்கிய அனைத்து புத்தகமும் வாசித்த பிறகுதான் புதிய புத்தகம் வாங்கவேண்டுமென்று. அதனால் புத்தகமேதும் வாங்காமல் இருக்கும் நிலை வந்துவிடுமோ என அச்சம் வந்துவிட்டது. வீட்டில் எனது புத்தக அலமாரியைத்தான் வாழ்கையில் நான் சேர்த்து வைத்த சொத்தாக நினைக்கிறேன்.
நல்ல பதிவு வாழ்த்துகள்.
- சென்னைத்தமிழன்.
05.01.2009
\\வீட்டில் எனது புத்தக அலமாரியைத்தான் வாழ்கையில் நான் சேர்த்து வைத்த சொத்தாக நினைக்கிறேன்.\\
நா.முத்துகுமார் அவர்களின் தந்தையார் ஒரு புத்தகப்பிரியராம். அவர் இல்லத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நூல்கள் அணிவகுத்துள்ளதாம்.அவரின் வாசிப்பு ஆர்வத்தால்தான் இன்று நமக்கு ஒரு அருமையான கவிஞர் கிடைத்திருக்கிறார். அந்த வகையில் நாளை உங்கள்வீட்டிலிருந்து ஒரு கவிஞரோ, எழுத்தாளரோ உருவாகக்ககூடும். கல்விதானே நிரந்தரமான அழியாத சொத்து!
Post a Comment