Sunday, 1 March 2009

அரிசி தவிட்டிலிருந்து நெய் கிடைக்குமா? சுப்பனின் ஆராய்ச்சி.

நம்ம கதையின் நாயகன் சுப்பன். முதல் இவனோட பாத்திரப்படைப்பை பற்றி நீங்க தெரிஞ்சிக்க வேணாமா? இவனுக்கு பெரிய அளவில பேரெடுக்கணும், எல்லாரும் தன்னை புகழனும்னு ஆசை. அதற்காக என்ன செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தான். அவனுக்கு எட்டிய அளவிற்கு அறிவிற்கு முயற்சிகளும் தொடர்ந்தான்.
யாரோ ஒருத்தர் நிறைய படிச்சா புதுப்புது விடயங்கள் கிடைக்கும். அதிலிருந்து புதுசா ஏதாவது திட்டங்களை செய்றபடுத்தலாம்னு சொன்னார். அதிலிருந்து வடை மடிச்சுவர பேப்பரகூட விடுறதில்லை.
அப்படித்தான் ஒருமுறை வடை சாப்பிடும்போது வந்த பேப்பரில ஒரு புத்தகத்தோட பொருளடக்கம் பக்கம் மட்டும் இருந்தது. அதில பல தலைப்புகள் இருந்தது. அதையும் படிச்சான். 'அட்ரா சக்கை'னு வாய்விட்டு கத்தினான். கடைக்காரர்கள் எல்லாரும் பார்க்க, பேப்பரை மடிச்சு வச்சிகிட்டு வீட்டைப்பார்க ஓடினான்.

அந்தப் புத்தகத்தில அப்படி என்னதான் எழுதியிரந்துச்சி்ன்னு கேட்கிறீங்களா?
வீணாகும் பொருட்களிலிருந்தும் பயனுள்ள பொருட்கள் கிடைக்கும்! என்பதுதான், அந்த புத்தக பக்கத்தில் இருந்த விடயம்.

அதில நம்ம சுப்பனுக்கு பிடித்த விடயம், அரிசி (உமி) தவிட்டில் முயற்சி செய்தால் நெய் கிடைக்கும்! என்ற தலைப்பு இருந்ததுதான்.

இதுவரை யாரும் அப்படி முயற்சி செய்தது மாதிரி தெரியவில்லையே! இதை நாம் முயற்சி செய்தால் பெரும் பணமும், புகழும் கிடைக்கும் என்று எண்ணியபோதே, அவன் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.
தலைப்பை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது? இந்தப் பக்கத்தை கொண்ட முழுப் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தால் நல்லது. அப்போதுதானே நமமு முயற்சியை தொடரமுடியும் என்று யோசித்தான்.
ழைய புத்தகங்கள் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கிடைக்கும் என்று அவனது புலனாய்வில் கண்டுபிடித்தான்.
உடனே அங்கு பயணமானான். அங்கிருந்த புத்தக கடைகளை முழுவதுமாக அலசி ஆராய்ந்தான். கடைசியாக புத்தகத்தை கண்டுபிடித்தான்.
புத்தகத்தை வாங்கிக் கொண்டு வீடு நோக்கி பறந்தான். உலகமே அவன் கையில் சிக்கி விட்டதாக கற்பனையில் மிதந்தான். வீட்டிற்குள் சென்று தன் அறைக்கதவை சாத்திக் கொண்டு புத்தகத்தை முழுவதும் படித்தான். படித்ததும் குழம்பிப் போனான். அரிசி தவிட்டை முறத்தால் புடைத்தால் நெய் கிடைக்கும் என்றிருந்தது. வெறுமனே புடைத்தால் போதுமா? அப்படி புடைத்தால் எப்படி நெய் கிடைக்கும்? இதைப் பற்றி யாரிடம் கேட்பது? யாரிடம் கேட்கவும் பயந்தான். இதை அவர்கள் செய்ய ஆரம்பித்துவிட்டால்...ம்! நாமே யோசனை செய்வோம் என்று தீவிரமாக முயற்சி செய்தும் பிடிபடவில்லை.
களைப்பு மிகுதியால் புத்தகத்தை வீசி எறிந்தான். புத்தகம் புரண்டு விழுந்ததில் பக்கங்கள் மாறிப்போனது. யதோச்சையாக அப்புத்தகத்தை பார்வையிட்டவன் 'திருத்தப் பக்கங்கள்' என்ற பகுதியை இருந்தது. உடனே ஆர்வமாக எடுத்துப் பார்த்தான். அதில் அரிசி தவி்ட்டிலிருந்து நெய் கிடைக்கும் என்பதை நொய் கிடைக்கும் என்று மாற்றி வாசிக்கவும். பிழைக்கு வருந்துகிறோம் என்றிருந்தது. சுப்பன் புத்தகத்தை சுக்கு சுக்காக கிழித்தெறிந்தான்.

பி.கு. இந்தக் கதை சத்தியமாக எனது சொந்த படைப்பு இல்லை. நான் சிறுவயதில் கேட்டது (அ) படித்தது. ஞாபகத்தில் இருந்த அந்தக் 'கரு'வை தற்போது எனது சொந்த நடையில் எழுதியிருக்கிறேன், அவ்வளவுதான்
!

23 comments:

தேவன் மாயம் said...

அதில நம்ம சுப்பனுக்கு பிடித்த விடயம், அரிசி (உமி) தவிட்டில் முயற்சி செய்தால் நெய் கிடைக்கும்! என்ற தலைப்பு இருந்ததுதான்.///

நல்லா இருக்கு!!!
சுப்பன் யாரு அன்பு?

தேவன் மாயம் said...

நம்ம கதையின் நாயகன் சுப்பன். முதல் இவனோட பாத்திரப்படைப்பை பற்றி நீங்க தெரிஞ்சிக்க வேணாமா? இவனுக்கு பெரிய அளவில பேரெடுக்கணும், எல்லாரும் தன்னை புகழனும்னு ஆசை. அதற்காக என்ன செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டு இருந்தான். அவனுக்கு எட்டிய அளவிற்கு அறிவிற்கு முயற்சிகளும் தொடர்ந்தான்.///

ஏதோ நம்ம சாயல் தெரியுதே?

தேவன் மாயம் said...

யாரோ ஒருத்தர் நிறைய படிச்சா புதுப்புது விடயங்கள் கிடைக்கும். அதிலிருந்து புதுசா ஏதாவது திட்டங்களை செய்றபடுத்தலாம்னு சொன்னார்.//

இப்பிடி பிட்டைப்போட்டுட்டு
போய்கிட்டே இருப்பானுங்க!!!

தேவன் மாயம் said...

அதிலிருந்து வடை மடிச்சுவர பேப்பரகூட விடுறதில்லை.
அப்படித்தான் ஒருமுறை வடை சாப்பிடும்போது வந்த பேப்பரில ஒரு புத்தகத்தோட பொருளடக்கம் பக்கம் மட்டும் இருந்தது. அதில பல தலைப்புகள் இருந்தது. அதையும் படிச்சான். 'அட்ரா சக்கை'னு வாய்விட்டு கத்தினான். கடைக்காரர்கள் எல்லாரும் பார்க்க, பேப்பரை மடிச்சு வச்சிகிட்டு வீட்டைப்பார்க ஓடினான்.///

யுரேகா வுக்கு ’பதிலா அட்ரா சக்கை”!!!!

தேவன் மாயம் said...

தில் அரிசி தவி்ட்டிலிருந்து நெய் கிடைக்கும் என்பதை நொய் கிடைக்கும் என்று மாற்றி வாசிக்கவும். பிழைக்கு வருந்துகிறோம் என்றிருந்தது. சுப்பன் புத்தகத்தை சுக்கு சுக்காக கிழித்தெறிந்தான்.///

ஹா!! ஹா!! ஹா!!!!

குடந்தை அன்புமணி said...

//நல்லா இருக்கு!!!
சுப்பன் யாரு அன்பு?//

சத்தியமா,கதையின் நாயகன்தானுங்கண்ணா!

குடந்தை அன்புமணி said...

//ஏதோ நம்ம சாயல் தெரியுதே?//

உங்க சாயலாண்ணா? ச்சே! ச்சே! இல்லீங்கண்ணா!

குடந்தை அன்புமணி said...

//இப்பிடி பிட்டைப்போட்டுட்டு
போய்கிட்டே இருப்பானுங்க!!!//

உண்மைதானுங்கண்ணா!

குடந்தை அன்புமணி said...

//அரிசி தவி்ட்டிலிருந்து நெய் கிடைக்கும் என்பதை நொய் கிடைக்கும் என்று மாற்றி வாசிக்கவும். பிழைக்கு வருந்துகிறோம் என்றிருந்தது. சுப்பன் புத்தகத்தை சுக்கு சுக்காக கிழித்தெறிந்தான்.///

ஹா!! ஹா!! ஹா!!!!//

நன்றி்ங்கண்ணா!

நட்புடன் ஜமால் said...

பெரிய ஆராய்ச்சியா இருக்கும் போல

நட்புடன் ஜமால் said...

\\இந்தக் கதை சத்தியமாக எனது சொந்த படைப்பு இல்லை. நான் சிறுவயதில் கேட்டது (அ) படித்தது. ஞாபகத்தில் இருந்த அந்தக் 'கரு'வை தற்போது எனது சொந்த நடையில் எழுதியிருக்கிறேன், அவ்வளவுதான்!\\

இதுவே பெறும் திறமைதான்.

குடந்தை அன்புமணி said...

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஜமால் !

குடந்தை அன்புமணி said...

வண்ணத்துபூச்சியார், தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

ஆதவா said...

நல்லா சீரியஸா படிச்சுட்டு வந்தேன். கடைசியல் நம்ம படைப்பில்லானு ஏமாத்திப்புட்டீங்களேஎ!!!!,,,,



ம்ம்ம்ம்...



ஆனா இந்த சுப்பன் யாருன்னு மட்டும் சொல்லிடுங்க... ஏற்கனவே தேவா சார் ஒத்துக்கிட்டாலும் ஏதோ ஒண்ணு இடிக்குது!!



கதை சொல்வதைப் போன்று இருந்தாலும் குறுகிய வரிகளாக இருப்பதால் நிறுத்தி நிறுத்தி படிக்க வேண்டியிருந்தது!!!



கதையின் கரு.... சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது!

குடந்தை அன்புமணி said...

//ஆதவா said...
நல்லா சீரியஸா படிச்சுட்டு வந்தேன். கடைசியல் நம்ம படைப்பில்லானு ஏமாத்திப்புட்டீங்களே!!!!,,,,//

சீரியஸாவா படிச்சீங்க?

ம்ம்ம்ம்...



ஆனா இந்த சுப்பன் யாருன்னு மட்டும் சொல்லிடுங்க... ஏற்கனவே தேவா சார் ஒத்துக்கிட்டாலும் ஏதோ ஒண்ணு இடிக்குது!!

சத்தியா கற்பனைப் பெயருங்க...


கதை சொல்வதைப் போன்று இருந்தாலும் குறுகிய வரிகளாக இருப்பதால் நிறுத்தி நிறுத்தி படிக்க வேண்டியிருந்தது!!!

நிறுத்தி நிறுத்தியா? ஸ்குரேலிங்- ல கதையை போடலையே?

கதையின் கரு.... சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது!

ரொம்ப நன்றீங்க! (பதிப்பகத்தில செஞ்ச சிறு தவறால நம்ம கதாநாயகன் பட்ட பாட்டை பார்த்தாவது பதிப்பகத்தார் கவனமா இருக்கணும்.)

நட்புடன் ஜமால் said...

\\இவனுக்கு பெரிய அளவில பேரெடுக்கணும், எல்லாரும் தன்னை புகழனும்னு ஆசை\\

நிறைய பேருக்கு இருக்கு.

நட்புடன் ஜமால் said...

\\அதிலிருந்து வடை மடிச்சுவர பேப்பரகூட விடுறதில்லை.\\

ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

\\அரிசி தவிட்டை முறத்தால் புடைத்தால் நெய் கிடைக்கும் என்றிருந்தது\\

ஹா ஹா ஹா

புரிந்துவிட்டது

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல நகைச்சுவை நண்பா.. நான் உங்கள தமிழ் வார்த்தைகள் பற்றி தொடர்பதிவு எழுத கூப்பிடலாமுன்னு இருந்தா.. அதுக்குள்ளே நீங்க ஒரு மீள்பதிவ இன்னொரு தளத்துல போட்டாச்சு.. என்னத்த சொல்ல..

ராமலக்ஷ்மி said...

கோமா அனுப்பி வைத்தார்கள். நல்ல கதை:))))!

திவாண்ணா said...

:-))
அப்புறமா மத்ததும் படிக்கிறேன்!

Anonymous said...

SUppan may be a fool in your point of view. Do you know you extract oil from same rice bran....

I am on the business ...By the way my name is Subbu. If you need please come to my plant

I too got an idea from a news paper from Agri University Coimbatore....

K.Subbu, Sathy

Kavinaya said...

:))) ரசித்தேன் :)

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...