'கற்றது கை மண்ணளவு' அப்படின்னு சொல்வாங்க. வலைத்தளம் ஆரம்பித்த புதிதில் கண்ணைக்கட்டி காற்றில் விட்டது போலிருந்தது. வலைத்தளம் ஆரம்பிக்கவே நிறைய பயிற்சிகள் செய்தேன் என்பது வேறு விசயம். பின்பு பலரின் வலைத்தளங்களுக்கு சென்று பல புதிய விடயங்களை கற்றுக் கொண்டேன். அதுபோல் எனக்கு தெரிந்ததை இங்கு உங்களுக்கு சொல்கிறேன். இது பலருக்கும் தெரிந்திருக்கலாம். அவர்களுக்காக அல்ல... என்னைப்போல் அறிந்துகொள்ள ஆர்வமுள்ள, ஆனால் வழி தெரியாதவர்களுக்காகவே இப்பதிவு!விரும்பி வாசிக்கும் சில வலைத்தளத்திற்கு நீ்ங்கள் பாலோவராகவும் ஆகியிருப்பீர்கள். அப்படி ஆகியிருப்பவர்கள், அவர்களின் வலைத்தளத்தில் புதிய பதிவு போடுவதை எப்படி அறிவீர்கள்?அவரின் வலைத்தளத்திற்கு சென்று பார்போம்! இதென்ன புதுசா கேட்கிறே?என்று என்னை முறைக்காதீர்கள்!
அவர்களின் வலைதளத்திற்கு சென்றுதான் பார்ப்பேன் என்பது உங்கள் பதிலாக இருக்குமென்றால், இனி அந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். தினந்தோறும் உங்கள் வலைத்தளத்திற்கு தவறாது வருகை புரிவீர்கள் தானே அப்புறமென்ன!
உங்கள் வலைத்திலிருந்தே (அங்கு சென்று பார்க்காமலேயே) புதிய பதிவு போடப்பட்டிருக்கிறதா? என்பைத அறிய எளிய வழி உள்ளது.முதலில் உங்கள் வலைத்தளத்திற்கு சென்று,
டேஸ்போர்டை திறந்துகொள்ளுங்கள்.
ஆட்கெஜட் பகுதியை கிளிக் செய்க. அதில்,
பிளாக் லிஸ்ட் என்பதில் க்ளிக் செய்க.
தோன்றும் பகுதியில் தலைப்பில் உங்களுக்கு விருப்பமான தலைப்பை (உ.தா= நண்பர்களின் வலைத்தளம்) கொடுத்து, அதில் கேட்கப்பட்டிருப்பதில் உங்களுக்கு
விருப்பமான ஆப்சனை தேர்ந்தெடுத்துக்கொண்டு,
ஆட்லிஸ்ட் என்பதை க்ளிக் செய்யு்ஙகள்.
கீழே உள்ளதுபோல் தோன்றும். அதில்
நான் பின்தொடரும் அனைத்தும் என்பதை க்ளிக் செய்யுங்கள்.
பின்பு
ஆட் செய்யுங்கள். அதன்பிறகு கேட்கும் கேள்விகள் உங்கள் விருப்பத்திற்கு மாற்றம் செய்து கொள்ளுங்கள். பிறகு
சேவ் செய்க. பிறகு
லேவுட் பகுதி தோன்றும். அங்கு
சேவ் செய்துகொண்டு,
உங்கள் வலைதளத்திற்கு சென்று பாருங்கள்.
இப்போது உங்கள்
விருப்பமானவர்களின் வலைதளத்ததில் ஒரு
புதிய பதிவு இடப்பட்டால் உங்கள் வலைத்தளத்திலிருந்து பார்த்து, உடன் அந்த தளத்தை க்ளிக் செய்து உடன்
பின்னூட்டமிட்டு கலக்கலாம். தவறவிடமாட்டீர்கள், இனி!உங்கள் நண்பரும் மகிழ்வார்! இதற்கு பின்னூட்டமிட மறந்துவிடாதீர்கள்!
21 comments:
ஓஹ்! இப்படி ஒரு வழியிருக்கா
நன்றிங்க.
//நட்புடன் ஜமால் said...
ஓஹ்! இப்படி ஒரு வழியிருக்கா
நன்றிங்க.//
தங்கள் வருகைக்கு எனது நன்றி!
\\தங்கள் வருகைக்கு எனது நன்றி!\\
என்ன நான் புதுசா வருவது மாதிரி
ஒவ்வொறு வாட்டியும் நன்றி சொல்றீங்க
மன்னியுங்கள். இனி, அப்படிச் சொல்லவில்லை.(விடுபட்ட தகவல் - இந்த முறையை செயல்படுத்திய பிறகு, புதிதாக யாருடைய பாலோவராக மாறினால் மீண்டும், டாஸ்போர்டுக்கு சென்று ஏற்கெனவே இணைக்கப்பட்டிருக்கும் இணைப்பில் எடிட் க்ளிக் செய்து, ஆட் லிங்ஸ் க்ளிக் செய்து புதிய பதிவர்களை இணைக்க வேண்டும்.)
இது ஒரு உபயோகமான பதிவு...
அப்படியில்லையெனின், blogger.comஇல் நமது அக்கவுன்ட்டை ஓபன் செய்த உடனே நாம் ஃபாலோ செய்யும் வலைப்பூக்களில் லேட்டஸ்ட்டாக இடப்பட்ட இடுகைகள் நமது டாஷ்போர்ட்டின் அடியில் தோன்றும்..
அதைப்பார்த்தும் தெரிந்து கொள்ளலாம் இல்லீங்களா???
கட்டாயம் நமது வலைப்பூவில் இந்த கெட்ஜட்டை இணைத்துத் தான் பாக்கணும்ன்னு இல்லை...
:-)
பயனுள்ள இடுகை...
// வேத்தியன் said...

பயனுள்ள இடுகை...//
ஒவ்வொரு முறையும் டேஸ்போர்டை திறக்கவும் தேவையில்லை என்பதே இதன் சிறப்பு.

நல்ல வழியா இருக்கெ!
\தங்கள் வருகைக்கு எனது நன்றி!\\
என்ன நான் புதுசா வருவது மாதிரி
ஒவ்வொறு வாட்டியும் நன்றி சொல்றீங்க///
அதானே!
(விடுபட்ட தகவல் - இந்த முறையை செயல்படுத்திய பிறகு, புதிதாக யாருடைய பாலோவராக மாறினால் மீண்டும், டாஸ்போர்டுக்கு சென்று ஏற்கெனவே இணைக்கப்பட்டிருக்கும் இணைப்பில் எடிட் க்ளிக் செய்து, ஆட் லிங்ஸ் க்ளிக் செய்து புதிய பதிவர்களை இணைக்க வேண்டும்.)///
இப்படியும் செய்யவேண்டுமா?
அப்படியில்லையெனின், blogger.comஇல் நமது அக்கவுன்ட்டை ஓபன் செய்த உடனே நாம் ஃபாலோ செய்யும் வலைப்பூக்களில் லேட்டஸ்ட்டாக இடப்பட்ட இடுகைகள் நமது டாஷ்போர்ட்டின் அடியில் தோன்றும்..
அதைப்பார்த்தும் தெரிந்து கொள்ளலாம் இல்லீங்களா???
கட்டாயம் நமது வலைப்பூவில் இந்த கெட்ஜட்டை இணைத்துத் தான் பாக்கணும்ன்னு இல்லை...///
எல்லா நேரமும் டேஷ்போர்ட் போகமாட்டொம் இல்லையா!
அன்புமணி என் பதிவில் பின்பற்றுபவர்கள் தெரியவில்லை பார்த்தீர்களா?
என்ன செய்யலாம் ? சொல்லுங்க?
பலருக்கும் தெறியப்படுத்தியதற்கு நன்றி அடுத்த இடுகையாக இதை வெளிவிடலாம் என்று நினைத்தேன்.நல்ல தகவல்களை யார் சொன்னால் என்ன? நமது நோக்கம் தகவல்கள் பிளாக்கர்களை சென்றடைவதுதானே.வாழ்த்துக்கள்!
நான் பெரும்பாலும் என் பதிவுக்கு வருபவர்களை பின் தொடருகிறேன். முக்கியமானவர்களை, Blog list ல் போட்டு வைக்ககறேன்...
புதியவர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்
//ஆதவா said...
நான் பெரும்பாலும் என் பதிவுக்கு வருபவர்களை பின் தொடருகிறேன். முக்கியமானவர்களை, Blog list ல் போட்டு வைக்ககறேன்...
புதியவர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்//
நல்ல வழிமுறைதான். நானும் இதையே பின்பற்றுகிறேன்.
//S.sampath kumar said...
பலருக்கும் தெறியப்படுத்தியதற்கு நன்றி அடுத்த இடுகையாக இதை வெளிவிடலாம் என்று நினைத்தேன்.நல்ல தகவல்களை யார் சொன்னால் என்ன? நமது நோக்கம் தகவல்கள் பிளாக்கர்களை சென்றடைவதுதானே.வாழ்த்துக்கள்!//
தங்கள் வருகைக்கு நன்றி!தங்கள் நோக்கமே என் நோக்கமும், அதோடு நண்பர்களின் பதிவை தவறவிடக்கூடாது என்பதுதான். இந்தப்பதிவிட தூண்டியது தேவா அவர்களின் ஒரு பின்னூட்டம்தான்.
//thevanmayam said...
அன்புமணி என் பதிவில் பின்பற்றுபவர்கள் தெரியவில்லை பார்த்தீர்களா?
என்ன செய்யலாம் ? சொல்லுங்க?//
இந்த கேட்ஜெட் சோதனை முயற்சியில் உள்ளது, தற்போது அனைத்து வலைப்பதிவுகளிலும் கிடைக்காது. விரைவில் சோதித்து பாருங்கள்!
வழங்கியவர் Blogger
பரி்ட்சார்த்த முறையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல். சிலநாட்களுக்குப்பிறகு சரியாகிவிடும் என்றும் தகவல்.
அன்புமணி நான் அப்படிதான் செய்து வைத்துள்ளே. ஆனா எல்லரோடத்தும் சேர்த்தல் ரொம்ப நீளமாக
வருமோ என்று யோசித்தேன். ஆனா உங்க ஐடியா நல்லா இருக்கு ட்ரை பண்ணறேன்
நன்றி அன்புமணி!!
// RAMYA said...
அன்புமணி நான் அப்படிதான் செய்து வைத்துள்ளே. ஆனா எல்லரோடத்தும் சேர்த்தல் ரொம்ப நீளமாக
வருமோ என்று யோசித்தேன். ஆனா உங்க ஐடியா நல்லா இருக்கு ட்ரை பண்ணறேன்
நன்றி அன்புமணி!!//
நன்றி டீச்சரம்மா!
தகவலுக்கு நன்றிங்க!!!
nalla vishayam nanbare
Post a Comment