கண் பார்வையற்ற ஒருவன் வீதியில் நடந்து போய்க்கொண்டிருந்தான். அப்போது தெருவில் ஒரு குழந்தைக்கு சோறு ஊட்டிக்கொண்டிருந்தாள் ஒரு பெண்மணி. அந்தக்குழந்தை சாப்பிட அடம்பிடித்துக் கொண்டிருந்தது. கோபமுற்ற அந்தப் பெண்மணி அந்தக் குழந்தையை அடித்துவிட்டாள். உடனே அந்தக் குழந்தை பெரும்குரலெடுத்து அழ ஆரம்பித்தது. தெருவில் சென்றுகொண்டிருந்த கண்பார்வையற்றவர், குழந்தை அழுத சத்தம் கேட்டு நின்று, "ஏனம்மா, குழந்தை அழுகிறது?" என்று கேட்டடார்.
அதற்கு அந்தப் பெண்மணி, "சாப்பிட அடம் பிடிக்கிறாள்" என்றாள்.
"அடம்பிக்கிற அளவுக்கு என்ன சாப்பிட கொடுக்கிறீங்க?" என்றார் அவர்.
"பால் சாதம்தான்" என்றாள் தாய்.
"பால் சாதம் என்றால் என்படி இருக்கும்?" என்றார் கண்பார்வையற்றவர்.
"பால் வெள்ளையா இருக்கும். அதை சாப்பாட்டில் கலந்து குழந்தைக்கு கொடுக்கிறேன்" என்றாள்.
"ஏம்மா, என்னிடம் வெள்ளையா இருக்கும் என்றால் எப்படி தெரியும்? ஏதாவது உதாரணம் சொல்லி சொல்லேன்?" என்றார்.
"வெள்ளை என்றால் 'கொக்கு' போல இருக்கும்" என்றாள் அவள்.
"கொக்கு எப்படி இருக்கும் என்று கண்தெரியாத என்னிடம் சொல்கிறாயம்மா. எனக்கு கொக்கு எப்படி இருக்கும் என்றே தெரியாதே!" என்றார்.
"கொக்கு இப்படித்தான் இருக்கும்" என்று தன் கையை கொக்குபோல் செய்து, கண்பார்வையற்றவரின் கையைப்பிடித்து தொட்டு காண்பித்தாள் அந்த தாய்.
அதற்கு அந்த கண்பார்வையற்றவர், "அதுசரி,இவ்வளவு பெரிய கொக்கு போல இருப்பதை குழந்தை வாயில் திணித்தாள், அந்தக் குழந்தை என்ன செய்யும் பாவம்" என்று சொன்னார்.
அந்த தாய் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தாள்.
நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொள்ளவும். இது எனது 25 பதிவு.
30 comments:
25க்கு வாழ்த்துகள்
\\"அதுசரி,இவ்வளவு பெரிய கொக்கு போல இருப்பதை குழந்தை வாயில் திணித்தாள், அந்தக் குழந்தை என்ன செய்யும் பாவம்" என்று சொன்னார்.\\
ஹா ஹா ஹா
25வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
கொக்கு எப்படி இருக்கும்....
ஏன் வெண்ணையை அதன் தலையில் வச்சு பிடிக்க போறீங்களா...
// "அதுசரி,இவ்வளவு பெரிய கொக்கு போல இருப்பதை குழந்தை வாயில் திணித்தாள், அந்தக் குழந்தை என்ன செய்யும் பாவம்" //
கும்மோணம் குசும்பு... ஹி..ஹி... ஊர் பாசம் வேற ஒன்னுமில்ல
இப்ப போட்டு இருக்கின்ற லே அவுட் நல்லா இல்ல.
black base white letters - படிப்பதற்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
(தப்பா எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பதால் சொல்லிவிட்டேன்...)
// நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொள்ளவும். இது எனது 25 பதிவு.//
எடுத்துகிட்டோம்..
//இராகவன் நைஜிரியா said...
இப்ப போட்டு இருக்கின்ற லே அவுட் நல்லா இல்ல.
black base white letters - படிப்பதற்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
(தப்பா எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்பதால் சொல்லிவிட்டேன்...)//
அண்ணன் சொன்னால் அப்பீல் ஏது? இதோ மாற்றிவிட்டேன்!
சின்ன வயதில் கேட்ட கதைதான். இருப்பினும் நீங்கள் சொல்லிக் கேட்பதும் நல்லாத்தான் இருக்கு :)
//எம்.எம்.அப்துல்லா said...
சின்ன வயதில் கேட்ட கதைதான். இருப்பினும் நீங்கள் சொல்லிக் கேட்பதும் நல்லாத்தான் இருக்கு :)//
மிக்க நன்றி நண்பரே... தங்கள் வருகைக்கு!
ஹாஹா.... வாய்விட்டே சிரித்துவிட்டேங்க. அந்தம்மாவை நினைச்சா சிரிப்பா இருக்கு.. கண்ணு இல்லாதவரைக் கண்டா சிந்திக்கவும் தோணுது!!!
இருபத்தி ஐந்தாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்... இன்னும் போட்டுக்கினே இருங்கப்பூ!!! நாங்க வந்துகினே இருப்போம்.
அதற்கு அந்த கண்பார்வையற்றவர், "அதுசரி,இவ்வளவு பெரிய கொக்கு போல இருப்பதை குழந்தை வாயில் திணித்தாள், அந்தக் குழந்தை என்ன செய்யும் பாவம்" என்று சொன்னார்.
அந்த தாய் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தாள்.///
நல்ல கதை!!
//ஆதவா said...
ஹாஹா.... வாய்விட்டே சிரித்துவிட்டேங்க. அந்தம்மாவை நினைச்சா சிரிப்பா இருக்கு.. கண்ணு இல்லாதவரைக் கண்டா சிந்திக்கவும் தோணுது!!!
இருபத்தி ஐந்தாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்... இன்னும் போட்டுக்கினே இருங்கப்பூ!!! நாங்க வந்துகினே இருப்போம்.//
தங்களை போன்றவர்களின் உற்சாக ஆதரவுகள் இருக்கும் வரை நம்ம கடை திறந்திருக்கும்.
//thevanmayam said...
அதற்கு அந்த கண்பார்வையற்றவர், "அதுசரி,இவ்வளவு பெரிய கொக்கு போல இருப்பதை குழந்தை வாயில் திணித்தாள், அந்தக் குழந்தை என்ன செய்யும் பாவம்" என்று சொன்னார்.
அந்த தாய் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தாள்.///
நல்ல கதை!!//
வருக! வருக!
//நசரேயன் said...
வாழ்த்துக்கள்//
இடைவேளைக்கு பிறகான தங்கள் வருகைக்கு நன்றி!
;;))
//ஜீவன் said...
;;))//
இடைவேளைக்கு பிறகான தங்கள் வருகைக்கு நன்றி!
பாவம் கொக்கு
புதுசு எழுதுங்க அன்பு!
குருடன் யானை கதை ஒன்னு இருக்கு இல்ல!
கொக்கு தலையிலதான் வைக்கனுமா?
24
குவார்டெர்!!!!!25?
25 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..
பழையது ஆனாலும் நன்றாக உள்ளது
வது பதிவுக்கு வாழ்த்துகள்!
நண்பா, பின்னூட்டமிடும் சாளரத்தை, பதிவினூடாகவே வரும்படி செய்யலாமே?
25வது பதிவுக்கு வாழ்த்துகள்!
நண்பா, பின்னூட்டமிடும் சாளரத்தை, பதிவினூடாகவே வரும்படி செய்யலாமே?
//ஆ.ஞானசேகரன் said...
25 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..
பழையது ஆனாலும் நன்றாக உள்ளது//
வருக! வருக! ஞானசேகரன் அவர்களே!
//பழமைபேசி said...
25வது பதிவுக்கு வாழ்த்துகள்!
நண்பா, பின்னூட்டமிடும் சாளரத்தை, பதிவினூடாகவே வரும்படி செய்யலாமே?//
எப்படின்னு சொல்லித்தாங்க நண்பரே!
நகைச்சுவைக்கு மட்டும்னு லேசுல விட்டுட முடியாது. உள்ள சரக்கு இருக்குது. நல்ல விசயந்தான்.
25 வது பதிவு.வாழ்த்துகள்.
நல்ல நகைச்சுவை. 25வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment