கஜல் ஓர் அறிமுகம்.
'கஜல்' அரபியில் அரும்பி, பாரசீகத்தில் போதாகி, உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.
'கஜல்' என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள்.
கஜல் பெரும்பாலும் காதலையே பாடும், அதுவும் காதலின் சோகத்தை.
'கஜல்' இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இந்த சுதந்திரத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
- அப்துல் ரகுமான்.
அப்துல் ரகுமான், கஜல் எனும் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். ஆனால்,உருதுவில் 'மிர்சாகாலிப்' தான்.
கஜல் என்றாலே அதில் 'மிர்சாகாலிப்'பின் வாசம் வீசும்.' என்கிற அளவுக்கு அதில் அவர் சிறந்த கவிஞர். அவரின் கஜல் ஒன்று...
காதல் என்பது
நம் வசத்தில் இல்லை
அது ஒரு
வினோதமான நெருப்பு!
பற்றவைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது!
- மிர்சாகாலிப்
அப்துல் ரகுமானின் கஜல் துளிகள் சில...
நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்
*******
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
*********
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.
*******
மரணம்
உன்னைவிட நல்லது
வாக்களித்தும்
நீ வரவில்லை
வாக்களிக்காதிருந்தும்
அது வந்துவிட்டது
************
என் கனவு
உன்முன் ஏந்திய
பிச்சை பாத்திரம்
*******
உன் கண்களால்தான்
நான் முதன் முதலாக
என்னப் பார்த்தேன்.
- அப்துல் ரகுமான்.
********************************
என் நண்பரின் கஜல்...
எதை எடுப்பது?
எதை விடுப்பது?
தேநீர்கோப்பையிலும் நீ
மதுக்கோப்பையிலும் நீ
************
நெருப்பை விழுங்கியிருந்தால்
ஜீரணித்திருக்கலாம்
நானோ
காதலை விழுங்கிவிட்டேன்.
***********
உன்னைப் பார்ப்பதும்
பார்க்காமல் இருப்பதும்
கண்களுக்கு சாபம்
*********
காதல்
தாய் தந்தையில்லாத
அனாதை
அதை
நீயும் நானும்தான்
வளர்க வேண்டும்
*********
உன் வண்ணம் குழைத்தே
நிறைவடைகிறது ஓவியம்
*********
எனக்குத் தெரியும்
என்னைப்
பழி தீர்க்கத்தான்
நீ
காதலை தேர்ந்தெடுத்தாய்
- கோ. பாரதி மோகன்.
45 comments:
கவாலியில் கூட கஜலின் வடிவங்கள் எடுத்தாளப்பட்டு இருக்கும். கவனிச்சுருக்கீங்களா??
:))
ஹை மீ த ஃபர்ஷ்ட்டா???
// எதை எடுப்பது?
எதை விடுப்பது?
தேநீர்கோப்பையிலும் நீ
மதுக்கோப்பையிலும் நீ //
காதல் கிடைத்தால் தேநீர்
காதல் கவிழ்ந்தால் மது..
// நெருப்பை விழுங்கியிருந்தால்
ஜீரணித்திருக்கலாம்
நானோ
காதலை விழுங்கிவிட்டேன்//
அது சரி.. நமக்கு எது ஜீரணம் ஆகும் அப்படின்னு தெரிஞ்சு விழுங்கணுங்க..
// உன்னைப் பார்ப்பதும்
பார்க்காமல் இருப்பதும்
கண்களுக்கு சாபம் //
பார்ப்பது கண்களாக இருந்தால்..
// காதல்
தாய் தந்தையில்லாத
அனாதை
அதை
நீயும் நானும்தான்
வளர்க வேண்டும் //
நல்ல உரம் போட்டு வளர்க்க வேண்டும்.. பார்த்துகுங்க அப்பன் என்ற மாடு வந்து மேஞ்சிடப் போகுது...-:)
// உன் வண்ணம் குழைத்தே
நிறைவடைகிறது ஓவியம் //
வேற வழி அப்படி சொன்னாத்தான் மயங்குவாங்க... பாராட்டு பிடிக்காத மனிதன் உண்டா?
// எனக்குத் தெரியும்
என்னைப்
பழி தீர்க்கத்தான்
நீ
காதலை தேர்ந்தெடுத்தாய் //
தெரிஞ்சுமா அதுல போய் விழுந்தீங்க..
அய்யோ பாவம் நீங்க...
தெரியாமல் செய்வது தவறு, தெரிஞ்சே செய்வது தப்பு..
நீங்க செய்தது என்ன என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை.
ஹி... ஹி... கஜல் கவிதைகளுக்கு கும்மி அடிக்க முடியுமான்னு முயற்சி செய்து பார்த்தேன்.
எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்.. பின்னூட்டத்தில் மட்டும்..
பி.கு : இதை மனசுல வச்சுகிட்டு ஊருக்கு வரும்போது பின்னிடப்பிடாது..
பற்றவைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது!///*********
அடம் பிடிச்ச கழுதைன்னு சொல்லுங்க
நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்
///***********
இது எவ்ளோ பெரிய உண்மை....காதல் வந்த போது தானே..ஆடையை தேடினார்கள் ஆதாமும் ஏவாளும்....
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்./////*******
பைத்தியம் பிடிச்சு போச்சு...
எனக்குத் தெரியும்
என்னைப்
பழி தீர்க்கத்தான்
நீ
காதலை தேர்ந்தெடுத்தாய்/////****
பலி கடா ஆக்கிட்டாங்களே
அஜால் குஜல் கவிதை நல்லா இருக்கு
அப்துல் ரகுமானின் கஜல் புத்தகத்தை படித்திருக்கின்றைன்.
உங்கள் நண்பரின் கஜலில் என்னை கவர்ந்தது
//எதை எடுப்பது?
எதை விடுப்பது?
தேநீர்கோப்பையிலும் நீ
மதுக்கோப்பையிலும் நீ//
கஜல் பற்றி தெரிந்துகொண்டோம்.
தகவலுக்கு நன்றி.
அட இவ்வளவுதானுங்களா கஜல்.... அப்படிப் பார்த்தா நானும் பல எழுதியிருக்கேன்... கஜல்னு தெரியாமலேயே!! ஹி ஹி ஹி..
கஜல்.. பேரே அழகா இருக்குங்க...
இருவரின் கவிதைகளும் பிரமாதம். உங்களது பின்னூட்ட முறையை பழைய முறைக்கு மாற்றிக் கொள்ளலாமே!! என்னால் பதில் தரமுடியவில்லை.ல் உங்களது சென்ற பதிவிற்கும் தர இயலவில்லை. கொஞ்சம் கருத்தில் கொள்ளுங்களேன்.
கஜல் கவிதைகள் அருமை
கஜல்' அரபியில் அரும்பி, பாரசீகத்தில் போதாகி, உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்///
பாரசீகம்னா எது?
'கஜல்' என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள்.
கஜல் பெரும்பாலும் காதலையே பாடும், அதுவும் காதலின் சோகத்தை.///
மனம் சொல்லும் சோகங்களா?
கஜல்' இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இந்த சுதந்திரத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.///
நானும் எடுத்துக்கிறேன்..
அப்துல் ரகுமான், கஜல் எனும் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர்.///
பழைய கவிதைகள் நன்றாக இருக்கும்
காதல் என்பது
நம் வசத்தில் இல்லை
அது ஒரு
வினோதமான நெருப்பு!
பற்றவைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது!///
all great things are very simple..
நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்////
Very straight!!
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடிஅலைகிறேன்.///
அதோகதி!!!
கஜல்
நான் உணர்ந்து உள்ளேன்
ஆனால் இன்னும் புரிந்து கொள்ள இயலவில்லை
பகிர்ந்துகொண்ட அனைத்து கஜல் கவிதைகளும் மிக அழகாகவே இருந்தன...
பகிர்வுக்கு நன்றி நண்பரே!
அடடே!தாம்பரம் ஆளா! நெருங்கிட்டீங்க! :)
நானும் அங்கேதான்!
புதிததாக வருகை தந்திருக்கும் ஆ.முத்துராமலிங்கம்,மு. கவிதாராணி,ஷீ-நிசி அவர்களுக்கு எனது நன்றிகள்!
//ஷீ-நிசி said...
அடடே!தாம்பரம் ஆளா! நெருங்கிட்டீங்க! :)
நானும் அங்கேதான்!//
அப்படியா! மிகவும் மகிழ்ச்சி. தாம்பரத்தில் எங்கே?
அற்புதம்.....அழகு.....
அனைத்தும் நன்றாக இருந்தது.....
கஜல் பற்றி வெகு அருமையாக முன்னோட்டம் தந்துள்ளீர்கள்.....அப்துல் ரகுமான் அவர்களின் கஜல்கள் சிலவற்றை படித்துள்ளேன்.....
//உங்களது பின்னூட்ட முறையை பழைய முறைக்கு மாற்றிக் கொள்ளலாமே!! என்னால் பதில் தரமுடியவில்லை.ல் உங்களது சென்ற பதிவிற்கும் தர இயலவில்லை. கொஞ்சம் கருத்தில் கொள்ளுங்களேன்.//
எனது பதவில் பின்னூட்டமிட.... செலக்ட் புரொபயில் > கூகில் அக்வுண்ட்> கமெண்ட் > போஸ்ட் கமெண்ட் . அவ்வளவுதானே... (தமிழ் மணத்தில் ஓட்டளிக்க இதுதான் வசதியாக இருப்பதாக நண்பர்கள் கூறியதால் மாற்றினேன்.)
வாங்க கூல்ஸ் கார்த்தி! மிகவும் மகிழ்ச்சி.
நான் நேற்றைக்கே வந்து படிச்சிட்டுப் போயிட்டனே?இஃகிஃகி!!
கவிதைகள் எல்லாம் அருமை..
வழமை போல ஆராயவில்லை,,
ஒன்லி அனுபவிச்சேன்...
:-)
பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்...
போய்ப் பாருங்க...
http://hariniamma.blogspot.com/2009/03/blog-post_21.html
இதயங்களின் சாரலில்
இதயம் நனைந்தேன்
பாராட்டுகளுக்கு நன்றி்.
- கோ.பாரதிமோகன்
அனைத்தும் நன்றாக இருக்கின்றன அண்ணா
வாழ்த்துகள்
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி! விருது வழங்கிய ஹரிணி அம்மா அவர்களுக்கும் எனது நன்றிகள்!
I Will come later to comments this..
// (பாலோவர் போடலாமே!) //
குடந்தை அன்புமணி அவர்களே.. பாலோவர் போடுதல் பற்றி சற்று விளக்கினால் எனக்கு எளிதாக இருக்கும்.
//நெருப்பை விழுங்கியிருந்தால்
ஜீரணித்திருக்கலாம்
நானோ
காதலை விழுங்கிவிட்டேன்.//
நெருப்பை விழுங்கிவிட்டேன்.. அமிலம் அருந்திவிட்டேன் என்கிற பாடல்தான் நினைவுக்கு வருகிறது. காதலென்ன இருட்டுக்கடை அல்வாவா விழுங்குவதற்கு? அப்படியே காதலை விழுங்கினாலும் அதை இதயத்திற்கு கீழே கொண்டு செல்லக்கூடாது. இந்த தெறமை இருந்தாத்தான் காதல் சுகமாகும் :-)
//எனக்குத் தெரியும்
என்னைப்
பழி தீர்க்கத்தான்
நீ
காதலை தேர்ந்தெடுத்தாய்//
அருமையான வரிகள். உடம்புல சுகர் இருந்தாலும், மனசில பிகர் இருந்தாலும் நல்லா சாப்பிட்டவன் யாரும் இல்லை. :-)
👌
Post a Comment