Thursday 26 March, 2009

தோழியர்களுக்கு மட்டும் இப்பதிவு

என் வீட்டுக்கு அருகில் புதிதாக ஒரு குடும்பம் குடிவந்தது. முதல் இரண்டு நாட்கள் புன்னகையிலே கழிந்தது. பின்பு என் மனைவியின் மூலம் அவர்களின் வீட்டு நிலவரம் அறிந்துகொண்டேன்.அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு பெண், இரண்டு ஆண். பெண்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. பையன்களுக்கும் திருமண வயதுதான். அவர்கள் வீட்டில் எப்போதும் அந்த வீட்டு அம்மாவின் குரல்தான் கேட்கும். மற்றவர்கள் வீட்டில் இருக்கிறார்களா என்றே தெரியாத அளவிற்கு இருந்தது. அவர்கள் குடிவந்து சில மாதங்களில் கோடை காலம் வந்தது. கோடை வந்தாலே மின்தடையும் வரும் என்பது உத்திரவாதமான விசயமாயிற்றே. நாங்கள் இருக்கும் வீடு மிகவும் நெருக்கமாக இருக்கும். அதனால், மின்விசிறி எப்போதும் ஓடிக்கொண்டேதான் இருக்கும். மினதடை ஏற்பட்டால் அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வந்துவிடுவோம்.(நகரத்து வாழ்க்கை அவ்வளவுதான்) அப்படித்தான் அன்றும் நடந்தது. மின்தடை ஏற்பட அனைத்து குடும்பங்களும் வராண்டாவில் கூடிற்று. நானும் பக்கத்து வீட்டுக்காரரும் மாடிக்கு சென்றோம். மெல்ல என்னிடம் பேச்சு கொடுத்தார்.
பரஸ்பர அறிமுகத்திற்கு பிறகு அவரிடம் கேட்டேன், "வீட்ல நீங்க இருக்கிறதே தெரியமாட்டேங்குதே, வெளியவே வரமாட்டேங்கிறீங்க..." என்றேன்.

"வெளியே வரவே சங்கடமா இருக்கு எனக்கு. தினந்தோறும் பார்திருப்பீங்களே. என் பொண்டாட்டி பேசுறதை. நான் வாயைவே திறக்க மாட்டேன். நானும் எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்திட்டேன். பிள்ளைகளுக்கு முன்னே என்னை எதுவும் சொல்லாதேன்னு. ஆனா அவ எதுவும் கேட்கிறதில்லை. அவளே என்னை மதிக்காதபோது, என் பிள்ளைகள் எங்க மதிக்கும். அதனால மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. அதனாலதான் வெளியே வர்றதில்லை" என்றார்.
எனக்கு ஏன் கேட்டோம் என்றாகிவிட்டது.
"மெதுவா அவங்களுக்கு புரிகிற மாதிரி எடுத்துச் சொல்லுங்க. நிச்சயம் புரிஞ்சுப்பாங்க." என்று ஆறுதல் சொன்னேன். அதற்குள் மின்சாரம் வர, அவங்க வீட்டம்மா கூப்பி்ட சென்றுவிட்டார்.
எனக்கு அவரை நினைத்தால் பாவமாக இருந்தது. நான் என் மனைவியிடம் நடந்ததை சொன்னேன்.
என் மனைவி,"பாவமாத்தான் இருக்கு.அப்படியெல்லாம் நான் நடந்துக்க மாட்டேன், பயப்படாதீ்ங்க"என்றாள்.

ம்! நம்பிக்கைதானே வாழ்க்கை!

இந்த சம்பவத்தில் ஏதேனும் நீதி தெரியுதா?
பின்னூட்டுங்க!

தங்கள் வருகைக்கு நன்றி! கருத்துக்களை தருக! கவிதை குரல் ' வலைப்பதிவுக்கும் வருகை தந்தால் மகிழ்வேன்.

27 comments:

நட்புடன் ஜமால் said...

தோழன் என்பதால்

உள்ளேன் ஐயா! மட்டும்.

இராகவன் நைஜிரியா said...

நீதியா...

நாம சமத்தா இருந்தா, வீட்டுகாரம்மா கத்த மாட்டாங்க... இது என்னோட பாலிசி..

எம்.எம்.அப்துல்லா said...

ஒன்லி அட்டெண்டன்ஸ் :)

சென்ஷி said...

:-))

இதுல நீதி தெரியுதோ இல்லையோ எனக்கு ஒரு ரொம்ப நல்லவர் தெரியறாரு :-)

இராகவன் நைஜிரியா said...

ஒரு ஓட்டும் போட்டுட்டேன்

அ.மு.செய்யது said...

பயனுள்ள பதிவு அன்புமணி !!!

பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Anonymous said...

Kasmalam...

ஆதவா said...

அன்புமணி!!! அவர்களே...

வெகு சிரமத்தோடு ரொம்ப நேரம் காத்திருந்துதான் உங்கள் பதிவுக்கு நான் பதிவிட முடிகீறது.. (உங்கள் கவிதைகுரல் தளத்திர்கு வந்து படித்தும் பின்னூட்டம் இட முடியவில்ல!! இரண்டு மூன்று நாட்களாகவே!) ஏதோ ஒரு தளத்தை மட்டும் பழைய முறைக்கு மாற்றவும்...

அது சரி, இந்தப் பதிவு.... நோ கமெண்ட்ஸ்... ஏன்னா, இதுதான் தோழியருக்கு மாத்திரமாச்சே!!!

குடந்தை அன்புமணி said...

//ஆதவா said...
அன்புமணி!!! அவர்களே...

வெகு சிரமத்தோடு ரொம்ப நேரம் காத்திருந்துதான் உங்கள் பதிவுக்கு நான் பதிவிட முடிகீறது.. (உங்கள் கவிதைகுரல் தளத்திர்கு வந்து படித்தும் பின்னூட்டம் இட முடியவில்ல!! இரண்டு மூன்று நாட்களாகவே!) ஏதோ ஒரு தளத்தை மட்டும் பழைய முறைக்கு மாற்றவும்...

அது சரி, இந்தப் பதிவு.... நோ கமெண்ட்ஸ்... ஏன்னா, இதுதான் தோழியருக்கு மாத்திரமாச்சே!!!//

ஆதவா! ஓட்டைவிட உங்கள் கருத்துரையே முக்கியம். எனவே பழைய முறைக்கே இரண்டு தளத்தையும் மாற்றிவிட்டேன்.

Unknown said...

//என் மனைவி,"பாவமாத்தான் இருக்கு.அப்படியெல்லாம் நான் நடந்துக்க மாட்டேன், பயப்படாதீ்ங்க"என்றாள்.//

நல்லா இருக்கு.காரணமில்லாம்ல் காரியம் இல்லை.அந்த அம்மா கத்துவதற்க்கு ஏதாவது காரண்ம் இருக்கு,

1.ஏமாற்றி கல்யாணம்
2.செக்ஸில் வீக்
3.ரிட்டையர்ட்
4.பையன்கள் த்லையெடுத்து விட்டதால் உதாசீனம்
5.ஹிஸ்டீரியா
6.வீட்டு வேலையில் பங்கேற்க்காமை
7.ம்னைவி -கணவன் நிற வேறுபாடு
8.கல்யாணம் ஆன புதிதில் ஆட்டம் போட்டது- பழி வாங்கல்

ஆ.சுதா said...
This comment has been removed by the author.
ஆ.சுதா said...

அன்புமணி இது தோழியர்களுக்கு மட்டும்ன்னு சொல்லிட்டீங்க...
சரி படிக்கர யாரா இருந்ததாலும்
இத படிச்சப்புறமாவது இப்படி நடக்காம இருக்கட்டும் (ஆண்களிலும் இப்படி சிலர் இருக்க கூடும் இல்லியா)

நல்ல பதிவு அக்கறையானத்

குடந்தை அன்புமணி said...

1.ஏமாற்றி கல்யாணம்
2.செக்ஸில் வீக்
3.ரிட்டையர்ட்
4.பையன்கள் த்லையெடுத்து விட்டதால் உதாசீனம்
5.ஹிஸ்டீரியா
6.வீட்டு வேலையில் பங்கேற்க்காமை
7.ம்னைவி -கணவன் நிற வேறுபாடு
8.கல்யாணம் ஆன புதிதில் ஆட்டம் போட்டது- பழி வாங்கல்

முதலிரண்டும் உண்மையென்று நமக்குத் தெரியாது.மூணாவது உண்மை. ஆனால் இப்பொழுது கொரியர் கம்பெனியில் வேலை பார்க்கிறார்.4வது ,5வது இருக்கலாம். 6எனக்குத்தெரிந்தவரையில் பங்கேற்பு உண்டு.7- வித்தியாசமில்லை.
8- தெரியாது.

வேத்தியன் said...

நட்புடன் ஜமால் said...

தோழன் என்பதால்

உள்ளேன் ஐயா! மட்டும்.
//

நானுந்தேன்...
:-)

குடுகுடுப்பை said...

yes sir. escape sir

குடந்தை அன்புமணி said...

வருகைதந்த அனைவருக்கும் நன்றி!

நசரேயன் said...

உள்ளேன் ஐயா

வெற்றி said...

தோழியர் மட்டுமில்லை அன்புமணி, பல இடங்களில் தோழர்களும் இதைவிடக் கீழாக தங்கள் தங்கமணிகளை நடத்துவதைக் கண்டிருக்கேன்.

ஆக தோழர்களுக்கும் சேத்துன்னு சொல்லுங்கோ..

vanathy said...

கணவர்களை அவமதிக்கும் மனைவிகளைவிட மனைவிகளை அவமதிக்கும் கணவர்கள்தான் எமது சமுதாயத்தில் அதிகம்.
இந்த பெண் இப்படி நடப்பதற்கு என்ன காரணம் என்று முதலில் ஆராய வேண்டும்,
இவர் திருமணமான காலத்தில் இருந்தே இப்படித்தானா அல்லது சமீபகாலமாகத் தான் இப்படியா என்று கேட்டு அறியுங்கள்.
ஆரம்பத்தில் இருந்தே அப்படி என்றால் இது அவரின் சுபாவம்.
சமீபத்தில்தான் என்றால் பல காரணங்கள் இருக்கலாம்
பெண்களுக்கு menaupause/mensus வரும் காலத்தில்-due to hormonal changes- இப்படி எல்லோரிடமும் எரிந்து விழும் குணம் இருக்கும் --
அல்லது அந்த அம்மாவுக்கு ஏதோ வேலைக்களைப்பு ,கவலை ,மனஅழுத்தம் --depression
மாதிரியும் இருக்கலாம் ,அதனாலும் இப்படி கத்தி வெளிப்படுத்தலாம் .உங்களுக்கு அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் உங்கள் மனைவியை அந்த அம்மாவுடன் பேசி அவரது கருத்துகளை அறியச் சொல்லுங்கள்.
-வானதி

Anonymous said...

இந்த சம்பவத்தில் ஏதேனும் நீதி தெரியுதா?
பின்னூட்டுங்க!
___________
நீதி ஒன்னுமே தெரியலையே! விதிதான் தெரியுது..!

*இயற்கை ராஜி* said...

:-)

குடந்தை அன்புமணி said...

//கணவர்களை அவமதிக்கும் மனைவிகளைவிட மனைவிகளை அவமதிக்கும் கணவர்கள்தான் எமது சமுதாயத்தில் அதிகம்.//

உண்மைதான். ஆனால் சமீபமகாலமாக ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் நிதர்சனம்.

குடந்தை அன்புமணி said...

//உங்களுக்கு அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் உங்கள் மனைவியை அந்த அம்மாவுடன் பேசி அவரது கருத்துகளை அறியச் சொல்லுங்கள்.
-வானதி//

நிச்சயமாக அவர்களுக்கு உதவ வேண்டும் என்பது எனது எண்ணம்தான். ஆனால், அவரின் வயதைவிட என் மனைவியின் வயது நிறைய வித்தியாசம். முயற்சி செய்து பார்க்கிறேன்.

RAMYA said...

எனக்கு தெரிந்த நீதி பரஸ்பரம் இருவரும் ஒருத்தருக்கு ஒருவர் அட்ஜஸ்ட் செய்து கொண்டு செல்லவேண்டும்.

நீங்க அவருக்கு கூறி இருந்த அறிவுரையும் சாலச் சிறந்ததே.

எடுத்து சொல்லும் முறையில் சொன்னா கண்டிப்பாக அந்த குடும்பத் தலைவி மாறுவதற்கு சான்ஸ் இருக்கிறது.

ஆனால் உடனே பலன் எதிர் பார்க்ககூடாது. மெதுவாகத்தான் மார்தல்கள் ஏற்படலாம்.

ஏனெனில் எவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்து விட்டார் அல்லவா?

அதனலே முயற்சி செய்ய சொல்லவும். வெற்றி நிச்சயம்.

kuma36 said...

ம்ம்ம் எல்லாம் விதிதாங்க, நீதியெல்லாம் கிடையாது.

Anonymous said...

என் மனைவி,"பாவமாத்தான் இருக்கு.அப்படியெல்லாம் நான் நடந்துக்க மாட்டேன், பயப்படாதீ்ங்க"என்றாள்.///

ஹா! ஹா! சூப்பர்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒன்னும் சொல்றதிக்கில்ல

வீட்டுக்கு வீடு வாசப்படி

உங்க பக்கத்து வீட்டுல கொஞ்சம் உயரமான வாசப்படி

அவ்ளோதான்.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...