Tuesday 27 January, 2009

சீறும் பாம்பை நம்பு... சிரிக்கும் பெண்ணை நம்பாதே...


ஆட்டோக்களின் பின்புறத்தில் பலரும் தங்களுக்கு பிடித்தமான பொன்மொழிகளையும், தத்துவங்களையும், கவிதைகளையும்கூட எழுதி வைத்திருப்பார்கள். எனக்குத் தெரிந்தவரின் ஆட்டோ ஒன்றில் "சீறும் பாம்பை நம்பு! சிரிக்கும் பெண்ணை நம்பாதே!' என்று எழுதியிருந்தது.
"என்ன இப்படி எழுதியிருக்கிறீர்கள்? பெண்கள் படித்தால் தப்பாக நினைக்க மாட்டார்களா?'' என்றேன்.
"இதில் தப்பாக நினைக்க ஒன்றுமில்லை. இது ஆண்களை எச்சரிக்கக்கூடிய, அர்த்தம் பொதிந்த வாசகம்'' என்று கூறினார்.
எனக்கு ஆர்வம் எல்லை மீறி போய்விட்டது. "கொஞ்சம் விளக்கமாகத்தான் கூறுங்கள்'' என்றேன்.
"சீறும் பாம்பை நம்பு! சாலையில் நண்பர்களுடன் சென்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது பாம்பு ஒன்று குறுக்கிடுகிறது. நீங்கள் திகைத்து நிற்கிறீர்கள். தங்களைக் கண்டதும் பாம்பு படமெடுத்து சீறினால் அப்பாம்பு உங்களைக் கண்டு சீறவில்லை, உங்களுடன் வரும் உங்கள் நண்பரைக் கண்டுதான் சீறுகிறது என்று நீங்கள் சும்மா இருப்பீர்களா என்ன?
ஓட்டமாய் ஓடுவீர்கள். இல்லையென்றால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமில்லை! ஆக சீறும் பாம்பு யாரைப்பார்த்து சீறினாலும் தன்னைப் பார்த்து சீறியதாக நம்ப வேண்டும். அப்போதுதான் உயிர் பிழைக்க முடியும்.
அதே போல நண்பர்களுடன் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறீர்கள். அப்போது கல்லூரிவிட்டு வந்த பெண்கள் அங்கு பஸ்ஸிற்காக நிற்கிறார்கள். அப்பெண்களில் ஒருத்தி உங்கள் பக்கமாக திரும்பி சிரிக்கிறாள். உடனே உங்களைப்பார்த்துதான் சிரிப்பதாக நீங்கள் நம்பிக்கைக் கொள்கிறீர்கள். உங்களைப் போலவே உங்கள் நண்பர்களும் நம்புகிறார்கள். யாரைப்பார்த்து சிரித்தாள் என்று சரியாகத் தெரிந்துகொள்ளாவிட்டால் பிரச்சினைதான். இப்போது புரிகிறதா, "சீறும் பாம்பை நம்பு! சிரிக்கும் பெண்ணை நம்பாதே!' என்பதன் அர்த்தம்'' என்றார் நண்பர்.

25 comments:

நட்புடன் ஜமால் said...

\\"சீறும் பாம்பை நம்பு... சிரிக்கும் பெண்ணை நம்பாதே..."\\

இன்னுமா இந்த தலைப்பை விடல.

நட்புடன் ஜமால் said...

ஆஹா விளக்கம்

ஜூப்பர்.

மெய்யாலுமே இரசித்தேன்.

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...
ஆஹா விளக்கம்

ஜூப்பர்.

மெய்யாலுமே இரசித்தேன்.//


தேங்ஸ்ப்பா...

குடந்தை அன்புமணி said...

//இன்னுமா இந்த தலைப்பை விடல.//
இப்பவும் வண்டி ஓடுது. (நம்ம பதிவு கூடுதுல்ல...)

இராகவன் நைஜிரியா said...

இந்த வாசகம் எனக்கு தெரிந்து கிட்டதட்ட 20 வருஷமா படிச்சுகிட்டு இருக்கேன். ஆனா இதுவரைக்கும் இந்தமாதிரி விளக்கத்தை கேட்டதில்லீங்க..

ம்.. என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது !! -:)

தேவன் மாயம் said...

பேர்ல
என்ன இருக்கு.
நல்ல கருத்து..

mvalarpirai said...

நான் முதல ,நீங்க அந்த வாசகத்தை வைத்து, அந்த ஆட்டோ காரரையும், ஆண் வர்க்கத்தையும் வருத்து எடுக்க போறீங்கனு தான் நினைத்தேன் ...ஆனா கலக்கீட்டீங்க..பக்கா....

நாமக்கல் சிபி said...

அருமையான விளக்கம்!

குடந்தை அன்புமணி said...

வாங்க ராகவன் ஸார்... உடல் நலம் தேவலையா?

குடந்தை அன்புமணி said...

//thevanmayam said...
பேர்ல
என்ன இருக்கு.
நல்ல கருத்து..//
நன்றி தோழரே!

குடந்தை அன்புமணி said...

//mvalarpirai said...
நான் முதல ,நீங்க அந்த வாசகத்தை வைத்து, அந்த ஆட்டோ காரரையும், ஆண் வர்க்கத்தையும் வருத்து எடுக்க போறீங்கனு தான் நினைத்தேன் ...ஆனா கலக்கீட்டீங்க..பக்கா....//
புதிதாக வந்திருக்கும் நண்பரை வரவேற்கிறேன். கருத்துக்கு நன்றி!

குடந்தை அன்புமணி said...

// Namakkal Shibi said...
அருமையான விளக்கம்!//
புதிதாக வந்திருக்கும் நண்பரை வரவேற்கிறேன். கருத்துக்கு நன்றி!

Mohan said...

ஆஹா எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க! ம்ம்.

குடந்தை அன்புமணி said...

// Mohan said...
ஆஹா எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க! ம்ம்.//

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்கண்ணா!

வினோத் கெளதம் said...

அடடா அருமையான விளக்கம்..

malar said...

ஆண்களுக்கு என்ன வாசகம் .இல்ல ஏமார்டுகிரார்களே அந்த ஆண் களுக்கு என்ன வாசகம் .....சொல்லவே இல்லையே......

குடந்தை அன்புமணி said...

//vinoth gowtham said...
அடடா அருமையான விளக்கம்..//

தங்கள் கருத்துரைக்கும் நன்றி! வருகைக்கும் நன்றி!

குடந்தை அன்புமணி said...

// malar said...
ஆண்களுக்கு என்ன வாசகம் .இல்ல ஏமார்டுகிரார்களே அந்த ஆண் களுக்கு என்ன வாசகம் .....சொல்லவே இல்லையே......//
தங்கள் வரவு நல்வரவாகுக! அதற்கென்ன தேடிக்கொடுத்திடலாம்.

RAMASUBRAMANIA SHARMA said...

For womens...all the precautions are enabled in every area including AUTO...but for Gentlemans...I have heard nothing...

முரளிகண்ணன் said...

\\இந்த வாசகம் எனக்கு தெரிந்து கிட்டதட்ட 20 வருஷமா படிச்சுகிட்டு இருக்கேன். ஆனா இதுவரைக்கும் இந்தமாதிரி விளக்கத்தை கேட்டதில்லீங்க\\

repeatteee

குடந்தை அன்புமணி said...

முரளி கண்ணன்அவர்களே தங்கள் வருகைக்கு நன்றி!

குடந்தை அன்புமணி said...

RAMASURAMANIA SHARMA- THANKS, FOR YOUR VISTE!

Anonymous said...

நல்ல விளக்கம் அன்பு!! எப்படி தான் இப்படி எல்லாம் யோசிச்சு எழுதறீங்களோ ??

குடந்தை அன்புமணி said...

நன்றி புவனேஸ்... தங்கள் வருகைக்கும்... கருத்துக்கும்...

முனைவர் இரா.குணசீலன் said...

விளக்கம் மிகவும் நன்றாக இருந்தது.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...